வாட் இப் - ஸ்பேஸிடெர்ரா “ இளைஞர்களுக்கான வீடியோ சவால்

மொழிபெயர்த்தவர் D S Murugan Yadav

Spesterra banner

தலைப்பு: நாம் அதிகமாக போர் தளவாடங்களுக்காகச் செலவு செய்யாமல் உலக அமைதிக்காகச் செலவு செய்தால் என்ன?
இப்பொழுதே வாருங்கள், உங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்!

ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகம் நடத்தும் "வாட் இப் - ஸ்பேஸிடெர்ரா இளைஞர்களுக்கான வீடியோ சவால் ("What if – Spesterra" Youth Video Challenge”). இந்த சவால் இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் மற்றும் ஆயுத குறைப்பின் மகத்துவத்தையும், பாதுகாப்பான நிலயான உலகத்தை எப்படி அனைவருக்கும் தருகிறது என்ற அறிவைப் பரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி.

“ஸ்பேஸ் “- என்றால் லத்தீன் மொழியில் நம்பிக்கை என்று பொருள் “, டெர்ரா “என்றால் நிலம்’ என்று பொருள். வாட் இப் - ஸ்பேஸிடெர்ரா “இளைஞர்களுக்கான வீடியோ சவால். இந்த சவால் உலகில் உள்ள இளைஞர்களைப் “பேரழிவை ஏற்படுத்த கூடிய ஆயுதங்கள் இல்லாத ஒரு உலகம், அங்கு வழக்கமான போர் ஆயுதங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் எல்லாம் உலகிற்கும், உலக மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நன்மைக்காகப் பயன்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து அதை இரண்டு நிமிட வீடியோவில் அமைக்க வேண்டும்.

ஆதரவாளர்

ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்காna அலுவலகம் (United Nations Office for Disarmament Affairs).

சவாலுக்கான கால அவகாசம்

15 ஏப்ரல் 2021 இருந்து 15 ஜூலை 2021 வரை. வெற்றியாளர்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்படுவர்.

யார் பங்கு ஏற்கலாம்

18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஆனாலும் பங்கேற்கலாம். சவாலில் பங்குபெற்று வீடியோவை சமர்ப்பிக்கும் நுழைபவர். இந்த விடியோவை உருவாக்குவதற்குத் தீவிர ஈடுபாடு கொண்டு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த விடியோவை (இயக்குநராக, எழுத்தாளராக, ஒளிப்பதிவாளராக, தொகுப்பாளராக, வீடியோவில் வரும் கதாபாத்திரம் அல்லது ஒருங்கிணைப்பாளர்) இருக்க வேண்டும். இந்த வீடியோவை உங்கள் நண்பர், உடனுழைப்பவராகள் அல்லது உங்களுக்கு
தெரிந்தவர்களுடன் சேர்ந்து இயக்கலாம். அவரும் கண்டிப்பாக 18 வயது
முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பான முறையில் அந்தவீடியோ அவர்களின் எண்ணங்களையும் மற்றும் கருத்துக்களையும்
பிரதிபலிக்க வேண்டும்.

விவரக்குறிப்புகள்

உள்ளடக்கம்: நாம் அதிகமாக போர் தளவாடங்களுக்காகச் செலவு செய்யாமல் உலக அமைதிக்காகச் செலவு செய்தால் என்ன? என்ற தலைப்பில் ஒரு வீடயோவை உருவாக்க வேண்டும்.
மொழி: வீடியோவை எந்த மொழியில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம்.
வீடியோவின் நீளம்: அதிகபட்சம் 2 நிமிடம் 20 நொடிகள்.

தேர்ந்தெடுத்தல்

அணைத்து நுழைவுகளும் படைப்பாற்றல், புதுமை, தொகுத்தல், மெய்ப்பொருள் மற்றும் நுட்பம் போன்ற அளவுகோல்களின் படி தேர்வு செய்யப்படும்.

வெற்றியாளர்கள்

15 வெற்றியாளர்கள் அவர்களின் படைப்பின் அடிப்படை-யில் தேர்வு செய்யப்படுவார்கள். அணைத்து வெற்றியாளரrகலின் படைப்பும் ஐ. நா. வின் #Youth4DisarmamentInitiative வலைத்தளத்திலும் மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும். அதுமட்டும் அல்லாமல்:

(அ) அவர்கள் ஆயுதக் குறைப்பு பற்றிய கோடைகால தீவிர பாடத்திட்டத்தில். பங்குபெறலாம். (ஆ) ஆயுதங்கள் மற்றும் இராணுவ செலவினங்களில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் உலகத்தை அடையப் பரிந்துரைகளை உருவாக்குதல், (இ) வெற்றியாளர்களின் பரிந்துரைகளையும் மற்றும் வெற்றி பெற்ற வீடியோவையும் ஐ. நா.வின் நிகழ்ச்சியில் வெலியிடப்படும்.

இப்பொழுதே வாருங்கள் உங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்!. மேலும்

தகவலுக்கு மற்றும் உங்கள் உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கவும்https://www.youth4disarmament.org/spesterra-video-challengeவலைத்தளத்தைப் பார்வையிடவும்.

Enter Now

Join Us!

X

Sign up to our mailing list below.